search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் வீடு"

    • ராமநாதபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.
    • இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சொர்ண கணபதி (வயது 36). இவர் ராமநாதபுரம் சபாநடேச ஐயர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மாமியார் மற்றும் மனைவி குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று வீடு திரும்பிய சொர்ண கணபதி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் 9 பவுன் மற்றும் வெள்ளியிலான சாமி பொருட்கள், சாமி விளக்குகள், 2 பஞ்சாத்திர ருத்திரயாணி, ஒரு சந்தனபேழை, ஒரு குங்கும சிமில் ஆகியவை திருடு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மறவபட்டி அரசு நடுநிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

    காலாண்டு விடு முறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான செங்கப்படை சென்று விட்ட அவர்கள், நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை மிட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் பகுதியில் அடிக்கடி நடக்கும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆதலால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×